2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொது போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தம்

Ilango Bharathy   / 2022 மே 06 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைக் காலமாகக் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின்  எண்ணிக்கையானது சீனாவில்  மீண்டும் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக அந்நாட்டின்  வர்த்தக நகரமான ஷாங்காயில்  கடந்த ஒருமாத காலமாகக் கொரோனாத் தொற்று உச்சத்திலிருந்து வருகிறது. இதன் காரணமாக அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதோடு  கடும் கட்டுப்பாடுகளும்  விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது அந்நாட்டின் தலைநகரான பீஜிங்கிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கொரோனாத் தொற்றைக்  கட்டுப்படுத்துவதற்காக பீஜிங்கில் பகுதி அளவுக்குப் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அந்நகரிலுள்ள 40க்கும் அதிகமான சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், 158 பகுதிகளில் பஸ் சேவைகள்  நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,  ரெயில் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பாடசாலைகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் மூடப்பட்டுள்ளதோடு  உணவகங்கள் செயல்படவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .