2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொது மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 03 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே கலவரம் வெடித்தது.

பெருவில்  எரிபொருள், உரம் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வை கண்டித்து கடந்த திங்கள் முதல் கனரக வாகனங்களின் சாரதிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 குறிப்பாக அந்நாட்டு ஜனாதிபதி, மற்றும் பிரதமருக்கு எதிராக போர் கொடி தூக்கிய விவசாயிகள், வாகனஓட்டிகள் உட்பட பொதுமக்கள்  வீதியில் பேரணியாகச் சென்று தமது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (01) இடம்பெற்ற  பேரணியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெடித்த மோதலில்,  பொலிஸார்  மீது கற்களை வீசி பொது மக்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் கண்ணீர் புகை வீசியும், தடியடி நடத்தியும் பொது மக்களைப் பொலிஸார் விரட்டியடித்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X