Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 13 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொதுக் கழிப்பறையில் திருடிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்ட வினோத சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.
ஜேர்மனியின் தலைநகரான பெர்லினில் பொது கழிவறைகளை பயன்படுத்துவதற்கு 0.50 யூரோக்கள் கட்டணமாக அறவிடப்படுகின்றது.
இந்நிலையில் பெர்லினில் கடந்த புதன்கிழமை அன்று பொதுக் கழிப்பறையில் திருடிய குற்றச்சாட்டில் மூவரும், இருவர் கழிவறைகளில் திருடி கொண்டிருக்கும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து அதிகளவிலான நாணயங்கள் மற்றும் ஸ்குரூடிரைவர் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பொலிஸார் ”கடந்த டிசம்பர் மாதம் மாத்திரமே சுமார் 500 கழிவறைகளில் திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளதாகத்” தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago