2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் - 12 பேர் படுகாயம்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 17 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் அண்மைக்காலமாகப்  பொதுமக்கள் மீது  துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெரும் சம்பவங்கள் அதிகரித்து  வருகின்றன.

இதனால் “துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்” என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றைய தினம் (16)  அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள  வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் 12 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்திவருவதாகப் கொலம்பியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X