Editorial / 2019 ஜனவரி 22 , மு.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், பொருளாதார ரீதியிலான 10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தொடர்ந்த வழக்கில், மத்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென, சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டது.
பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய சட்டத்திருத்தத்தை எதிர்த்து, தி.மு.க சார்பாக அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, இவ்வழக்கைத் தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்ற போது, தி.மு.க தரப்பில், “பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, சமத்துவ உரிமைக்கு எதிரானது என, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. பொருளாதாரம் என்பது, நிலையற்ற தன்மை கொண்டது. அது மாறக்கூடியது என்பதால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மத்திய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர், “மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி, இந்தச் சட்டத்திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தவர். அரசியல் இலாபத்துக்காகவே ஆர்.எஸ்.பாரதி, இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். இந்தச் சட்டத்திருத்தத்தை அமுல்படுத்தப்போவது, மாநில அரசாங்கம் தான்” எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, இது தொடர்பாக மத்திய அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago