Freelancer / 2025 பெப்ரவரி 14 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மேலும், அவரது உரைகளை படிப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (பிப்.14) அவர் இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கெமிளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் நகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக மூட்டு மற்றும் இடுப்பு வலி, பெருங்குடல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸுக்கு, ஹெர்னியா அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago