Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 16 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய போரில் இங்கிலாந்தின் நிலைப்பாடு காரணமாக, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ரஷ்யாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் மற்றும் 10 பிரிட்டிஷ் அரசாங்க உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பிரித்தானிய அரசாங்கத்தின் முன்னோடியில்லாத விரோத நடவடிக்கையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
குறிப்பாக மூத்த ரஷ்ய அதிகாரிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை இது நினைவூட்டுகின்றது.
மேலும் இந்த தடைப் பட்டியல் விரைவில் விரிவுபடுத்தப்படும் என்றும் தகவல்கள் கூறியது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பல அமெரிக்க அதிகாரிகள் நாட்டிற்குள் நுழைய ரஷ்யா ஏற்கனவே தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .