Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 13 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்ணொருவர் தனது மகன் மற்றும் மருமகளுக்காக குழந்தையொன்றைப் பெற்றுக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான நான்சி என்பவரே இவ்வாறு தனது சொந்த மகனுக்கு வாடகைத் தாயாக இருந்து குழந்தையொன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
நான்சியின் மகன் ஜெஃப் மற்றும் அவரது மருமகள் கேப்ரியலுக்கு ஏற்கனவே வெரா, அய்வா என்ற இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டும் அவர்கள் டைசல் மற்றும் லூக்க என்ற இரட்டைக் குழந்தைகளை செயற்கை கருத்தரிப்பு முறையில் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து கேப்ரி தனது கருப்பையை நீக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்.
இதனால் அவர்கள் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. எனவே ஜெஃப்-கேப்ரியா தம்பதியின் அடுத்த பெண் குழந்தையான ஹன்னாவை நான்சி பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்நிலையில் "ஹன்னாவை எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்" என்று நான்சி மற்றும் அவரது கணவர் ஜேசன் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனது மகனுக்கு குழந்தை பெற்றுக்கொடுத்த அனுபவத்தை புத்தகமாக எழுதப்போவதாகவும் நான்சி தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago