Editorial / 2018 நவம்பர் 09 , மு.ப. 04:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவூதி அரேபிய மன்னர் சல்மான், தனது உள்நாட்டுக்குள் விஜயமொன்றை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொல்லப்பட்ட பின்னர், தனது மகனும் முடிக்குரிய இளவசரருமான மொஹமட் பின் சல்மானுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில், மகனுக்கான ஆதரவை உறுதிப்படுத்துவதற்காகவே அவர் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார் எனக் கருதப்படுகிறது.
காசிம் பிராந்தியத்துக்கு, மன்னரும் மகனும் விஜயம் செய்த போது, 4.3 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் பெறுமதியான வேலைத்திட்டங்களை அவர் ஆரம்பித்தார். அதேபோல், பொதுமன்னிப்புகளையும் அவர் வழங்கிவைத்தார்.
உள்நாட்டுக்குள் இவ்வாறான விஜயங்களை மன்னர் மேற்கொள்வது அரிதானதாகும். முடிக்குரிய இளவரசர் மீதான அழுத்தங்களுக்குப் பின்னர் இவ்விஜயத்தை மேற்கொண்டிருப்பது, அவரது விஜயத்தின் நோக்கத்தை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அதிலும், முடிக்குரிய இளவரசரையும் அழைத்துச் சென்றுள்ளமை, அவரது பெயரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியே எனக் கருதப்படுகிறது.
மன்னர் குடும்பத்தின் மீது, குறிப்பாக முடிக்குரிய இளவரசர் மீது, கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்த ஊடகவியலாளராக கஷோக்ஜி, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குள் சென்ற பின்னர் கொல்லப்பட்டிருந்தார். அவரது கொலையின் பின்னால், முடிக்குரிய இளவரசரே உள்ளாரெனக் குற்றஞ்சாட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
14 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
1 hours ago