2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மகள்களை விற்கும் பெற்றோர்

Mithuna   / 2024 ஜனவரி 02 , பி.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் 2024 பெப்ரவரி 8ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருந்து வருகிறது. ஒருபுறம் பணவீக்கம் அதிகரித்து வரும் அதே வேளையில், மறுபுறம் மோசமான வானிலையால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கித் தவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில், தங்களை வாழவைக்க, கடன் சுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தங்களுடைய மகள்களை விற்கும் நிலைக்கு இம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

10-12 வயதுடைய சிறுமிகள் 40-50 வயதுடைய வயது ஆண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் அளவுக்கு பாகிஸ்தானில் வறுமை நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தான் அழிவின் விளிம்பில் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

கடனை அடைப்பதற்காக தனது மகளை 40 வயதுடைய நடுத்தர வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்ததாக 10 வயது சிறுமி ஒருவரின் தந்தை ​ தெரிவித்துள்ளார். மேலும், திருமணத்திற்கு ஈடாக, அந்த நபர் அந்த விவசாயிக்கு நிறைய பணம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் 13 வயதிலும், சிலர் ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் திருமணம் என்ற பெயரில் பெண் குழந்தைகளை விற்று வருவது தெரியவந்துள்ளது..

கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அதிக மழை பெய்தது, இதனால் வெள்ளமும் ஏற்பட்டது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இப்பகுதி நாட்டிலிருந்து முற்றாக துண்டிக்கப்பட்டது. விவசாயிகளின் விளைநிலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஓராண்டுக்குப் பிறகு இங்கு நிலைமை மோசமாகியது. அப்பகுதியை கண்காணிக்கும் பாகிஸ்தான் அதிகாரிகளின் கூற்றுப்படி, “இந்த ஆண்டு சிறு வயதுக்குட்பட்ட திருமணங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன.

அதே சமயம், 2022ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இளவயது திருமணம் காரணமாக, பாடசாலைகளில் பிள்ளைகள் வருகையும் பாதிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்கு வந்தவுடனேயே பெண் குழந்தைகளுக்கு நிச்சயதார்த்தம் அல்லது திருமணம்” என்று  தெரிவித்துள்ளனர்.

தேசிய மகளிர் ஆணையத்தின் ஃபவுசியா ஷஹீன் கூறுகையில், “திருமணம் தொடர்பாக எங்களிடம் எந்த வழிமுறையும் இல்லை, ஆனால் பாகிஸ்தானில் பல இளவயது திருமண வழக்குகள் உள்ளன. இருப்பினும், இதற்கு கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பான சவால்களை சமாளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இதனால் மற்ற பெண்களும் பருவநிலை மணமகளாக மாறாமல் காப்பாற்ற முடியும்” என தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X