Ilango Bharathy / 2021 டிசெம்பர் 26 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி கொள்ள விரும்பினால் எந்த நகரத்தைத் தெரிவு செய்வார்கள் ? என்பது குறித்த ஆய்வினை பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று அண்மையில் நடத்தியது.
இவ் ஆய்வானது சராசரி மழைப்பொழிவு, வெப்ப நிலை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது.
இந்நிலையில் இவ் ஆய்வின் முடிவில் உலகிலேயே பொதுமக்கள் அதிகம் விரும்பும் நகரமாக முதலிடத்தில் டுபாய் நகரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கு காரணம் அங்கு மழையளவு 68 மி.மீ ஆகவும், சராசரி வெப்பநிலை 28.2 பாகை செல்சியஸில் இருந்து வருவதே ஆகும்.
அதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான அபுதாபி இரண்டாவது இடமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு சராசரி மழையளவு 42 மி.மீ ஆகவும், சராசரி வெப்பநிலை 27.9 பாகை செல்சியஸ் ஆகவும் உள்ளது.
மேலும் பக்ரைன் நாட்டின் மனாமா நகர் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago