Freelancer / 2025 ஜூன் 19 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் - ஈரான் பதற்ற நிலைமைக்கு மத்தியிலும், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்படாது வழமை போல நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வாரம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 13 சதவீதத்தினால் அதிகரித்தது.
பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 7 சதவீதம் குறைவடைந்து, கடந்த திங்கள் கிழமை முதல் வழமை போன்று எண்ணெய் வர்த்தகம் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மோதல்களால், முக்கிய எண்ணெய் பரிமாற்று மையங்களுக்குப் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும் எதிர்வரும் நாள்களிலும் இவை மூடப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்றும் நம்பப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (a)
3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
28 Mar 2026
28 Mar 2026