Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூன் 23 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் மீது அமெரிக்கா நேற்று தாக்குதல் நடத்தியது. இதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இஸ்ரேலின் டெல் அவிவ் உட்பட பல்வேறு நகரங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டன.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்க விமானப் படை தாக்கியது. ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதலை தொடர்ந்து மேற்கு ஆசியாவில் உள்ள ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் அல்லது ராணுவ வீரர்களும் இப்போது ஈரானின் இலக்காக மாறியுள்ளது என ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் மதகுரு கொமேனியின் நெருங்கிய உதவியாளர் ஹொசைன் ஷரியத்மதர் கூறுகையில், “ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா அத்துமீறி தாக்ககுதல் நடத்தியுள்ளது. இதையடுத்து, சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக எதிர்த்தாக்குதல் நடத்த வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி மத்திய கிழக்கில் உள்ள முக்கிய அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையை தாக்கவும், பிரிட்டிஷ், ஜெர்மனி, பிரெஞ்சு மற்றும் அமெரிக்க கப்பல்களுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியை மூடவும் ஈரானிய படைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Aug 2025
23 Aug 2025
23 Aug 2025