2025 மே 17, சனிக்கிழமை

மனித உடல்களை உரமாக்க முடிவு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 04 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மனித உடல்களை உரமாக்க அனுமதி வழங்கியுள்ள  அமெரிக்க மாநிலங்களின் பட்டியலில் தற்போது நியூயோர்க்கும் இணைந்துள்ளது.

உடலை எரித்தல்மற்றும்அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மாற்றாக,  சுற்றுச் சூழலுக்கு நன்மை பயக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகின்றது.

கடந்த  2019 ஆம் ஆண்டு இம் முறையை முதன் முதலாக  வொஷிங்டன் சட்டப்பூர்வமாக்கியது.

இதனைத் தொடர்ந்து  கொலராடோ, ஓரிகான், வெர்மான்ட் மற்றும் கலிபோர்னியா போன்ற மாநிலங்களும் இதனை சட்டபூர்வமாக்கியது.

அந்த வகையில் கடந்த  சனிக்கிழமை அன்று மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் அனுமதி வழங்கியதை அடுத்து இப்பட்டியலில் 6ஆவது மாநிலமாக நியூயோர்க்கும்  இணைந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .