2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

மனைவியைக் கொலைசெய்து நீரில் வேகவைத்த கணவன்

Ilango Bharathy   / 2022 ஜூலை 17 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் தனது மனைவியைக் கொலைசெய்து அவரது சடலத்ததை  நீரில் வேக வைத்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஆஷிக், நர்கீஸ் தம்பதியினர்.  . இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆஷிக், தனது மனைவியிடம் சண்டையிட்டு ஆத்திரத்தில் தலையணையைக் கொண்டு அவரைக் கொலை செய்துள்ளார்.
 
 மேலும் அந்த சடலத்தை அவர் காவலராகப் பணியாற்றும் பாடசாலையின் சமயலறையில் உள்ள ஒரு பானையில் போட்டு வேகவைத்ததாகக்  கூறப்படுகிறது.

இதனால் அதிர்ந்து போன பிள்ளைகள்  செய்வதறியாது திகைத்த போது, ஒரு பிள்ளை மாத்திரம்  இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதாகவும்,  இதையடுத்து சம்பவ இடத்திற்கு  பொலிஸார் வருவதற்குள், ஆஷிக் தனது குழந்தைகளில் 3 பேரை அழைத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  பானைக்குள் இருந்த நர்கீஸின் உடலை கைப்பற்றியப்   பொலிஸார்  இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .