2025 செப்டெம்பர் 08, திங்கட்கிழமை

மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 மே 15 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்பொருள் அங்காடியொன்றுக்குள் நுழைந்த  மர்ம நபர் ஒருவர் பொதுமக்களைக் குறிவைத்து நடத்திய  இனவெறித்தாக்குதலில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில்,பவ்வலோ ( Buffalo) பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியிலே நேற்றைய தினம்  (14) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தினையடுத்து குறித்த  மர்ம நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விசாரணையின் போது வெள்ளை இனத்தவரான  குறித்த நபர் 18 வயதானவர் எனவும் இத்தாக்குதலின் போது அவர் இராணுவ சீருடையை அணிந்திருந்தார் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X