2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மலைச்சரிவுகளில் பனிப்புயல்: சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள மலைச்சரிவுகளில் தற்போது கடும் பனிப்புயல் நிலவி வருகிறது.

இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X