2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மாநிலத்தில் மாசு; வெளிநாட்டில் முதலமைச்சர்

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியத் தலைநகர் டெல்லியின் வளி, “மிக மோசமானது” என்ற நிலைக்குச் சென்றுள்ள நிலையில், அதன் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், குடும்பப் பயணமாக வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார் என்ற தகவல், கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் வளி மாசடைதல், மிக மோசமானதாக மாறியுள்ள நிலையில், அவ்வளியைச் சுவாசிப்பது, உடலுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துமென, நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், முதலமைச்சர் கெஜ்ரிவாலும் அவரது குடும்பத்தினரும், டுபாய்க்குப் பயணமாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, சமூக ஊடக வலையமைப்புகளிலும் தொலைக்காட்சிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளிலும், அவரது நடவடிக்கை தொடர்பாகக் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X