2026 மே 07, வியாழக்கிழமை

dd

மிளகாய் உண்பதில் கின்னஸ் சாதனை

Ilango Bharathy   / 2022 ஜூன் 02 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
உலகின் மிகக்  காரமான கரோலினா ரீப்பர் மிளகாய்களை உண்டு இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
 
அமெரிக்காவைச் சேர்ந்த கிரெக் ஃபோஸ்டர் (Gregory Foster) என்பவரே  உலகின் மிகக்   காரமான மிளகாயான கரோலினா ரீப்பர் மிளகாய்கள் மூன்றை 8.72 வினாடிகளில் உண்டு  இச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நாம் உணவில் எடுத்து கொள்ளும் காரமானது ஸ்கோவில் ஹீட் யூனிட்கள் (SHU) என்ற அலகில் மதிப்பிடப்படுகின்றது. 
 
அதன் படி, கரோலினா ரீப்பர் மிளகாய் ஒன்றில் உள்ள காரத்தின் அளவு 16,41,  183 SHU என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .