2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் பொது முடக்கம்? அதிர்ச்சியில் மக்கள்

Ilango Bharathy   / 2023 மார்ச் 12 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவின் ‘ஜெஜியாங், ஜின்ஹுவா, ஹாங்சோ, நிங்போ‘ ஆகிய மாகாணங்களில் வசித்து வரும் மக்களிடையே கடந்த சில வாரங்களாக ‘H3N2‘ என்ற வைரஸ் காய்ச்சல் வேகமாகப்  பரவி வருகிறது.

 மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு இன்ஃப்ளூயன்ஸா அறிகுறிகள் அதிகமாகக்  காணப்பட்டு வருகின்றன.

 இந்நிலையில் சீனாவின் பெரும்பாலான நகரங்களில் இக்காய்ச்சல் பரவுவதைத்  தடுக்க , ஊரடங்கை அமுல்படுத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

அந்தவகையில் இதில் ‘சியான் மற்றும் ஷாங்சி நகரங்களில் காய்ச்சல் பரவுவதின் தீவிரம் அதிகரித்தால் ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்றும், அறிகுறிகள் தென்பட்டால் உடனே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜின்ஹுவா, ஹாங்சோ மற்றும் பெய்சென் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்லைன் மூலம் கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .