Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mayu / 2024 டிசெம்பர் 08 , மு.ப. 11:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் தேசத்தந்தை என அழைக்கப்பட்ட பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை தந்தை முஜிபுர் ரஹ்மான் பங்களாதேஷ் உருவாக முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
இதற்கமைய, பங்களாதேஷ் பணத்தாளில் முஜிபுர் ரஹ்மான் படம் அச்சிடப்பட்டுள்ளது. தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் பணத்தாளில் இருந்து அவரது படத்தை நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.
டாக்கா 20, 100, 500 மற்றும் 1000 பணத்தாள்களை அச்சிட செய்ய மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பணத்தாளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம் பெறக்கூடாது. அதற்குப் பதிலாக மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட Graffiti ஆகியவை பணத்தாளில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நான்கு வடிவிலான பணத்தாளில் வடிவத்தை மாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .