Freelancer / 2022 மார்ச் 17 , பி.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட ஊழல் எதிர்ப்பு அதிகாரசபையிலுள்ள ஒழுக்க ஆராய்வு மற்றும் மேற்பார்வை அலுவலகத்தின் முன்னாள் தலைவரான லியு யான்பிங், ஒழுக்கம் மற்றும் சட்டத்தை மீறியதாக சந்தேகிக்கப்படும் விசாரணையில் உள்ளார் என, சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணையை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய ஒழுங்கு ஆய்வு ஆணையம் மற்றும் தேசிய மேற்பார்வை ஆணையம் நடத்துகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம், சமூகக் கட்சியின் முன்னாள் சிரேஷ்ட அரசியல் ஆலோசகர் ஒருவருக்கு இலஞ்சம் வாங்கியதற்காக சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
உள் மொங்கோலியாவின் துணைத் தலைவராக இருந்த மா மிங் 150 மில்லியன் யுவானுக்கு மேல் சொத்து குவித்ததை நீதிமன்றம் கண்டறிந்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago