2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

மெக்சிகோவில் கனமழை: பலி எண்ணிக்கை 41-ஆக உயர்வு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 13 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவின் மத்திய மற்றும் தென்கிழக்கு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கடுமையான சேதம் அடைந்தன. இந்த கனமழையில் சிக்கி 28 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது.

மக்கள் வசிக்கும் தெருக்கள் ஆறாக மாறி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகள் மூழ்கின.

நிலச்சரிவில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தன. மேலும், 59 மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள், 308 பள்ளிகள் சேதம் அடைந்தன. 17 மாநிலங்களைச் சேர்ந்த 84 நகராட்சிகள் மின்சார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இதனால், பலி எண்ணிக்கை மேலும் உயர்ந்து இதுவரை 41 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணிக்காக 8700 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கனமழை, வெற்றம், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X