Shanmugan Murugavel / 2026 பெப்ரவரி 23 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் மிகவும் வேண்டப்பட்ட நபரும் அச்சப்படும் ஜலிஸ்கோ புதிய தலைமுறை போதைப்பொருள் கும்பலின் தலைவருமான எல் மெஞ்சோ என அழைக்கப்படும் நெமெஸியோ ஒஸெகுவெரா செரவன்டிஸ், அவரைக் கைது செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கையொன்றில் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
எல் மெஞ்சோவின் ஆதரவாளர்களுக்கும் இராணுவத்துக்குமிடையிலான மோதல்களில் மோசமாகக் காயமடைந்ததையடுத்து மெக்ஸிக்கோவின் தலைநகரான மெக்ஸிக்கோ நகரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதே ஞாயிற்றுக்கிழமை (22) எல் மெஞ்சோ உயிரிழந்துள்ளார்.
மத்திய மேற்கு ஜலிஸ்கோ மாநிலத்தின் தபாலா நகரத்தில் எல் மெஞ்சோவின் உறுப்பினர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று இராணுவ வீரர்களும் காயமடைந்துள்ளனர். நடவடிக்கைக்கு உதவிய தகவலை மெக்ஸிக்கோவுக்கு ஐக்கிய அமெரிக்கா அளித்துள்ளது.
இந்நிலையில் பதிலடியாக எட்டு மாநிலங்களில் கார்களை எல் மெஞ்சோவின் கும்பல் எரித்ததுடன், வீதிகளை முடக்கியதுடன், பாதுகாப்புப் படைகளைத் தாக்கியுள்ளது.
42 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
46 minute ago
2 hours ago