Freelancer / 2025 பெப்ரவரி 23 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொரீஷியஸ் நாட்டின் 57ஆவது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மொரீஷியஸ் தேசிய சட்டசபையில் பிரதமர் நவீன் ராம்கூலம் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,
"நமது நாட்டின் 57வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் பின்னணியில் எனது அழைப்பை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திரமோடி தேசிய தின விழாவில் கவுரவ விருந்தினராக கலந்துகொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் என்பதை அவையில் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
"பிரதமர் மோடியின் வருகையானது நமது இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளுக்கு ஒரு சான்றாகும்" என்று நவீன் ராம்கூலம் கூறினார்.
முன்னதாக கடந்த ஆண்டு தேசிய தின விழாவில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago