2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

யேமனில் மோதல் தவிர்ப்பு மீறல்; மாறி மாறிக் குற்றச்சாட்டுகள்

Editorial   / 2018 டிசெம்பர் 20 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் மத்தியஸ்தத்துடன், யேமன் அரசாங்கத்துக்கும் ஹூதி ஆயுததாரிகளுக்கும் இடையில் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் மீறப்பட்டமை தொடர்பில், இரண்டு தரப்புகளுமே, மாறி மாறிக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

யேமனின் துறைமுக நகரமான ஹொடெய்டாவில் அமுல்படுத்தப்படுவதற்காகவே, இந்த மோதல் தவிர்ப்பு கொண்டுவரப்பட்டிருந்தது. இதன்மூலமாக, உணவும் ஏனைய உதவிப் பொருட்களும் அப்பகுதிக்கு விநியோகிக்கப்பட முடியுமெனவும், அதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.

இந்த மோதல் தவிர்ப்பு, நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்திருந்த நிலையில், முதல் நாளிலேயே அது மீறப்பட்டதெனத் தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, ஹொடெய்டாவின் கிழக்கு, தெற்குப் பகுதிகளில், சுமார் ஒரு மணிநேரமாக ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் தவிர்ப்பு மீறலுக்கு, மற்றைய தரப்பையோ, அரசாங்கமும் ஹூதிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும், இந்த மோதல்களுக்குப் பிறகு, ஹொடெய்டாவில் ஓரளவுக்கு அமைதி நிலவியது. அத்தோடு, மோதல் தவிர்ப்புத் தொடர்பான காணொளி மூலமான கலந்துரையாடலில், அரசாங்கத் தரப்போடும் ஹூதி ஆயுததாரிகளோடும், ஐ.நா ஈடுபடத் திட்டமிட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X