2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ரம்ழான் மாதத்தில் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கவும்

Editorial   / 2023 மார்ச் 25 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான், பெஷவார் மார்தானில் உள்ள மக்கள் ,  மானிய விலையில் விற்கப்பட்ட மாவு சந்தையில் இருந்து மாவு மூடைகளட காணாமல் போனதாக புகார் கூறியதுடன், ரம்ழான் மாதத்தில் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள மூன்று மாவு ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

இதுகுறித்து தி நியூஸிடம் பேசிய மக்கள், மானிய விலையில் மாவு விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் பல விநியோகஸ்தர்களுக்கு ஒதுக்கீடு செய்திருந்தாலும், சில வியாபாரிகள் தரமற்ற மாவை விற்பனை செய்வதாகக் கூறினர்.

வெளிச் சந்தையில் இருந்து அதிக விலைக்கு மாவுகளை வாங்குவதற்கு மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக   கோடிக்கணக்கில் பணம் புரளுகின்றது என்று குற்றஞ்சாட்டிய பொதுமகன், அவையாவும் ஊழல்வாதிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது என்றார்.

சில வாரங்களுக்கு முன்பு, உணவுத் துறை மாவு ஆலைகளை கையும் களவுமாகப் பிடித்து உரிமத்தை ரத்து செய்ததாகவும், ஆனால் அவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் சில நாட்களுக்குப் பிறகு அவற்றின் ஒதுக்கீடுகள் மீட்டெடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மானிய விலை மாவு சந்தையில் இருந்து மாவு மூடைகள் காணாமல் போனதாக மற்றொரு குடியிருப்பாளர்   புகார் கூறினார். மாவட்ட நிர்வாகம் அரசியல் அடிப்படையில் மானிய மாவு ஒதுக்கீட்டை விநியோகித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்லையில் சில மாதங்களுக்கு முன் மானிய மாவு பெறும் டீலர்களின் ஒதுக்கீட்டை , துணை கமிஷனர் அப்துல் ரஹ்மான் ரத்து செய்தார்.

மானிய மாவு விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக புதிய விண்ணப்பங்களை பரிசீலிக்க குழு ஒன்று பின்னர் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 3ம் திகதிதி மானிய மாவு விநியோகம் செய்ய 234 டீலர்கள் அடங்கிய மற்றொரு பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது. மாவட்ட நிர்வாகம் மாவு ஆலைகளில் உள்ள நியாய விலைக் கடையையும் மூடியது. எவ்வாறாயினும், இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மீறி, பெரும்பான்மையான மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மானிய மாவு காணாமல் போனதாக புகார் தெரிவித்தனர்.

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .