2025 மே 19, திங்கட்கிழமை

ரஷ்ய- உக்ரேன் போர்; பைடனைச் சீண்டும் ட்ரம்ப்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது 2 மாதங்களைக் கடந்து நீடித்து வருகின்றது.  

இந்நிலையில் ” நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால்  உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே  இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன்”  என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப்  தெரிவித்துள்ளார்.

பிரபல ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”தற்போது  அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள ஜோ பைடனுக்குப்  பதிலாக நான்  அமெரிக்க ஜனாதிபதியாக  இருந்திருந்தால் உக்ரேனுக்கு எதிரான ரஷ்யப்  போரை முடிவுக்கு கொண்டு வந்திருப்பேன்.

அத்துடன் ”ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புடின், அடிக்கடி அணு ஆயுத தாக்குதல் எச்சரிக்கை விடுக்காத வண்ணம் செய்திருப்பேன்” எனத்  தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X