2025 மே 17, சனிக்கிழமை

ரஷ்ய ஜனாதிபதியின் மகளால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மார்ச் 28 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இளம் ரஷ்யர்கள் போதுமான தேசபக்தியுடன் இல்லை என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மகள் கேடரினா டிகோனோவா (Katerina Tikhonova)  குற்றம்சாட்டியுள்ளார்.

ரஷ்யர்கள், அந்நாட்டு  ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருக்கிறார்களா?  என்பதை அறிய விளாடிமிர் புடினின் மகள் கேடரினா,  சுமார் 70 மில்லியன் சமூக ஊடக கணக்குகளை அண்மையில் ஆய்வு செய்துள்ளார்.

இதில் 18 முதல் 35 வயதுடைய ரஷ்யர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்தததில் அவர்கள் தனது தந்தைக்கு விசுவாசமாக இல்லை என்பதையும், அவர்கள் புடினின் அரசை நேசிக்கவில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனர். 

இந்நிலையில் ”இளம் ரஷ்யர்களுக்கு போதுமான தேசபக்தி இல்லை” என அவர்  தெரிவித்துள்ளமை ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .