2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ரஷ்ய தூதருக்கு ஏற்பட்ட சோதனை

Ilango Bharathy   / 2022 மே 10 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}



2ஆம் உலகபோரின் முடிவில் சென்ற 1945ஆம் வருடம் ஹிட்லர் தலைமையிலான நாஜி படைகளுக்கு எதிராகப்  போரிட்ட ரஷ்யா வெற்றியடைந்தது.

  இதனை  நினைவுகூரும் வகையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள செஞ்சதுக்கத்தில் நேற்றைய தினம்  9 ஆம் திகதி இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.

இதேபோல் போலந்து நாட்டிலுள்ள வார்சா நகரிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற்றதோடு போரில் இறந்த சோவியத் யூனியன் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும்  நடைபெற்றது.

உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள சூழ்நிலையிலும், இக் கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், போலந்திலுள்ள  உக்ரேன் ஆதரவாளர்கள் சிலர் அப்பகுதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறித்த நிகழ்வில்  பங்கேற்பதற்காகப்  போலந்து நாட்டுக்கான ரஷ்ய தூதர் செர்கே ஆண்ட்ரீவ் சென்ற போது, அங்கு  போராட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர்  ரஷ்ய தூதர்  மீது சிவப்பு நிற தீந்தையை வீசியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் சென்றுவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .