2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ரஷ்ய வீரர்களுக்கு உக்ரேன் வெகுமதி; அதிர்ச்சியில் ரஷ்யா

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 05 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

உக்ரேன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது 41 ஆவது நாளாகத்  தொடர்ந்து நீடித்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரேன் அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் வீரர்களுக்கு தகுந்த வெகுமதி வழங்கப்படுமென  என உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக உக்ரேனின் சபாநாயகர் கோர்நியன்கோ பாராளுமன்றத்திகருத்துத் தெரிவிக்கையில் ” உக்ரேன்  அரசிடம் சரணடையும் ரஷ்ய வீரர்கள் தங்களுடைய பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள நினைத்தால் அதற்கு உக்ரேன்  அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் எனவும், குறிப்பாக போர் கப்பல் அல்லது போர் விமானத்தை ஒப்படைத்தால் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஹெலிகொப்டரை ஒப்படைத்தால்  5,00,000 அமெரிக்க டொர்களும், இராணுவ பீரங்கியை ஒப்படைத்தால் 100,000 அமெரிக்க டொலர்களும் வெகுமதியாக  வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உக்ரேனின் இவ் அறிவிப்பானது ரஷ்யா இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X