Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 28 , மு.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரெய்ன் மீதான படையெடுப்பு விவகாரத்தில் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளமைக்கு ரஷ்யா பதிலடி வழங்கியுள்ளது.
இதற்கமைய, தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் அதனை தங்கள் பணமான ரூபெலில் தான் வாங்க வேண்டும் என ரஷ்யா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்கும் ஜெர்மனி, போலந்து உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
ஐரோப்பாவின் 40 சதவிகித எரிவாயு தேவையை ரஷ்யா பூர்த்தி செய்து வருவதால் இந்த அறிவிப்பு உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தங்கள் பணமான ரூபெலை கொடுத்து கச்சா எண்ணெய் வாங்குமாறு ரஷ்யா அறிவித்த போதும், பல ஐரோப்பிய நாடுகள் அதை பின்பற்றாமல் தொடர்ந்தும் அமெரிக்க டொலரிலேயே ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வந்தன.
இந்த நிலையில், போலந்து, பல்கேரியாவுக்கு வழங்கிவந்த கச்சா எண்ணெய், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா நேற்று அதிரடியாக நிறுத்தியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .