Freelancer / 2022 மார்ச் 19 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா என்ற 98 வயதான உக்ரைன் பாட்டி, ரஷ்யாவுக்கு எதிராகப் போரிட உக்ரைன் இராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உக்ரைன் மீது படையெடுப்புக்கு உத்தரவிட்ட பின்னர், ஓல்ஹா தனது தாய்நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தில் சேர முன்வந்த போதும் துரதிர்ஷ்டவசமாக, அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது.
உக்ரைன் வெளியுறவு அமைச்சின் டுவிட்டர் பக்கத்திலேயே மேற்குறிப்பிட்ட செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா (98 வயது) தனது வாழ்க்கையில் 2ஆவது முறையாக போரை எதிர்கொண்டார். மீண்டும் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கத் அவர் தயாராக இருந்தார். ஆனால் எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கிய்வில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்“ என அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago