Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூலை 18 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும் , டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலோன் மஸ்கின் (Elon musk) தந்தையான எரோல் மஸ்க் குறித்து வெளியான தகவல் ஒன்று உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எரோல் மஸ்க்கிற்கு மொத்தம் இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான மே மஸ்க்கிற்கு பிறந்தவர்கள் தான் எலான் மாஸ்க், கிம்பல் மஸ்க் மற்றும் டாஸ்கா மஸ்க்.
திருமணமான 9 ஆண்டுகளில் மனைவியை பிரிந்த எரோல், ஹைடி என்பவரை பின்னர் திருமணம் செய்து கொண்டார். இதன் மூலம் ஆஷா, அலெக்சாண்டரா என்ற இரு மகள்களுக்கும் எரோல் தந்தை ஆனார்.
ஏரோல் மஸ்க்கை மணப்பதற்கு முன்பாகவே, ஹைடிக்கு ஜனா என்ற மகளும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் தான், எரோல் மஸ்க்கிற்கும், ஹைடியின் மகளான ஜனாவிற்கும் காதல் ஏற்பட்டு இருவரும் இணைந்து வாழ தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அது மட்டுமில்லாமல், எரோல் மஸ்க் - ஜனா தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த தகவலும் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, தங்களின் முதல் குழந்தையை பெற்ற எரோல் - ஜனா, 2019 ஆம் ஆண்டு, தங்களின் இரண்டாவது குழந்தையும் பெற்றுள்ளனர். எரோல் மஸ்க்கிற்கு 76 வயதாகும் நிலையில், அவரது வளர்ப்பு மகளான ஜனாவுக்கு 35 வயது தான் ஆகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் இது பற்றிய தகவல், வெளியே தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சமீபத்தில், எரோல் அளித்திருந்த பேட்டி ஒன்றில், "நாம் இந்த உலகில் வாழும் ஒரே நோக்கம் இனப்பெருக்கம் செய்வதற்காக தான்" என குறிப்பிட்டுள்ளார்.
தனது வளர்ப்பு மகளை எரோல் மஸ்க் திருமணம் செய்து கொண்டதால், எலான் மஸ்க் உள்ளிட்ட மற்ற பிள்ளைகள் யாரும் தங்களிடம் பேசுவதில்லை என்றும், தங்களின் சகோதரி உறவு கொண்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றதால், அவர்கள் இதனை விரும்பவில்லை என்றும் எரோல் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025