2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

விலையேற்றத்தால் வெடித்த கலவரம்; 164 பேர் உயிரிழப்பு

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கசகஸ்தானில் வாகனங்களுக்கான எரிபொருள் விலையை அந்நாட்டு அரசு அண்மையில் இரண்டு மடங்கு உயர்த்தியது.

இவ்விலையேற்றமானது  அந்நாட்டு மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தவே அந்நட்டு அரசுக் எதிராக பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பலபகுதிகளில் கலவரமும் வெடித்தது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமரான அஸ்கர் தான் பதவி விலகிக் கொள்வதாக அறிவித்தார்.

இருப்பினும் போராட்டத்தை கைவிடாத ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் , இதனை

அடக்க பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  164 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இக்கலவரத்தில்  போராட்டக்காரர்கள் 2,200 பேரும், பாதுகாப்பு படையினர் 1,300 பேரும் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தற்போது அந்நாட்டின் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாகவும், போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து அரசு அலுவலகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .