Ilango Bharathy / 2021 டிசெம்பர் 24 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாயின் தாக்குதலில் இருந்து தனது 4 வயதான தங்கையை 6 வயதான சிறுவனொருவன் காப்பாற்றிய சம்பவம் கடந்த வருடம் அமெரிக்காவில் இடம்பெற்றது.
இச்சம்பவத்தின் போது பிரிஜர் வாக்கருக்கு (Bridger Walker) என அழைக்கப்படும் குறித்த சிறுவனின் முகத்தை அந்நாய் கடுமையாகத் தாக்கியுள்ளது.

இதனால் அவனது முகத்தில் 90 தையல்கள் போடப்பட்டன. இச்சம்பவம் குறித்து வெளியான வீடியோவானது சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் அவனது வீரச் செயலுக்குப் பரிசளிக்கும் விதமாக ”ஸ்பைடர் மேன்( Spider-Man )திரைப்படக் கதாநாயகன் டாம் ஹாலண்ட் (Tom Holland), பிரிஜரைத் புதிய Spider-Man: No Way Home என்ற படப்பிடிப்புக்கு வர அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன் பிரிஜருடன் Spider-Man உடையில் நடிகர் ஹாலண்ட் பழகுவதைப் படமெடுத்து அச்சிறுவனின் தந்தை வாக்கர் அண்மையில் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார்.
இப்புகைப்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .