Editorial / 2019 ஜனவரி 25 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலாவில் எழுந்துள்ள அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், பல்வேறு நாடுகளும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன. அநேகமான மேற்கு நாடுகள், இடைக்கால ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளாரென அறிவித்துள்ள ஜுவான் குவைய்டாவுக்கு ஆதரவை வழங்கியுள்ளன. ஆனால், ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கும், பல்வேறு தரப்புகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இருவருக்கும் காணப்படும் முக்கியமான ஆதரவுகளின் சாராம்சம் பின்வருமாறு:
நிக்கொலஸ் மதுரோ
வெனிசுவேலாவின் உயர்மட்ட இராணுவம், தனது ஆதரவில் உறுதியாக உள்ளது. அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பட்ரினோ, தனது ஆதரவை உறுதிப்படுத்தியதோடு, ஜுவான் குவைய்டாவை, இராணுவம் நிராகரித்துள்ளதெனத் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம் - அந்நாட்டு உயர்நீதிமன்றம், மதுரோவின் ஆதரவாளர்களைக் கொண்டதாகும். அந்நீதிமன்றமும் தனது ஆதரவில் உறுதியாக உள்ளது. ஜுவான் தலைமையிலான காங்கிரஸால் எடுக்கப்பட்ட அனைத்துத் தீர்மானங்களையும், அந்நீதிமன்றம் கடந்த வாரம் நிராகரித்திருந்தது.
அரச எண்ணெய் நிறுவனம். வெனிசுவேலாவின் பிரதான வருமானம் எண்ணெய் என்ற நிலையில், அரச எண்ணெய் நிறுவனத்தின் ஆதரவு முக்கியமானது.
பிராந்தியத்திலுள்ள இடதுசாரி அரசாங்கங்களான கியூபா, பொலிவியா உள்ளிட்டன.
துருக்கி
ஜுவான் குவைய்டோ
ஐக்கிய அமெரிக்கா. ஜனாதிபதியாக ஜுவான் தன்னை அறிவித்த உடனேயே, தனது ஆதரவை ஐ.அமெரிக்கா வெளியிட்டிருந்தது. அத்தோடு, தனது பொருளாதார, இராஜதந்திர அதிகாரத்தைப் பயன்படுத்தி, வெனிசுவேலாவில் “ஜனநாயகத்தை நிலைநாட்ட உள்ளோம்” என, அந்நாடு தெரிவித்திருந்தது.
இலத்தீன் அமெரிக்காவிலுள்ள வலதுசாரி அரசாங்கங்கள் பல. அவற்றுள் பிரேஸில், கொலம்பியா, ஆர்ஜென்டீனா ஆகியன உள்ளடங்குகின்றன.
எதிரணிக்கு வழக்கமாகக் காணப்படும் மத்திய, உயர் வர்க்க ஆதரவுக்கு மேலதிகமாக, வெனிசுவேலாவின் வறுமையான மக்களும் ஆதரவளிக்கக்கூடுமென்ற சமிக்ஞைகள் காணப்படுகின்றன.
இராணுவத்தின் கீழ் மட்ட அதிகாரிகள் பலர், மதுரோவுக்கு எதிராகக் காணப்படுகின்றனர் எனக் கருதப்படுகிறது.
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
7 hours ago