Editorial / 2019 மார்ச் 06 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுவேலாவின் எதிர்க்கட்சித் தலைவரான குவான் குவைடோ, தனது நாட்டுக்கு நேற்று முன்தினம் திரும்பினார்.
நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட பயணத்தடையொன்றை மீறி, வெனிசுவேலாவின் ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுக்கெதிரான தனது பிரசாரத்துக்கான ஆதரவை அதிரிகரிக்கும் பொருட்டு லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்தே, தன்னைத்தானே ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட குவைடோ, வெனிசுவேலாவுக்குத் திரும்பியிருந்தார்.
மைகுவெட்டியா விமானநிலையத்தின் வருகை தருவோருக்கான மண்டபத்தை குவைடோவும் அவரது மனைவியும் வந்தபோது ஆதரவாளர்கள் வரவேற்றதைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் தலைநகர் கராகஸின் கிழக்குப் பகுதியில் தன்னை வரவேற்பதற்கு ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த எதிரணியின் பேரணிக்கு குவைடோ சென்றிருந்தார்.
வெனிசுவேலாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுப்பும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக, வெனிசுவேலாவின் உச்ச நீதிமன்றத்தின் கட்டளையை மீறி கடந்த மாதம் 23ஆம் திகதி, வெனிசுவேலாவிலிருந்து கொலம்பியாவுக்கு இரகசியமாக குவைடோ சென்றிருந்தார். எவ்வாறெனினும், கொலம்பியா, பிரேஸிலிருந்து உதவிகளைக் கொண்ட டரக்குகளின் தொடரணியை படைகள் தடுத்த நிலையில் மோதல்கள் வெடித்து பிரேஸிலிய எல்லையுடன் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டிருந்ததாக மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்திருந்தன.
கொலம்பியாவிலிருந்து ஆர்ஜென்டீனா, பிரேஸில், ஈக்குவடோர், பராகுவேக்கு குவைடோ பின்னர் சென்றிருந்தார். ஈக்குவடோரின் கடற்கரையோர நகரான சலினாஸிலிருந்து விமானம் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டிருந்த குவைடோ, அதன்பின்னர் பொது வெளியில் தென்பட்டிருக்கவில்லை. இந்நிலையில், பனாமா நகரத்திலிருந்து கராகஸுக்கு குவைடோ வந்ததாக வெனிசுவேலா ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனது பயணம் தொடர்பான தகவல்களை மூடிமறைத்திருந்த குவைடோ, முன்னறிவிப்பிலாமல் வந்திறங்கியதோடு, விமான நிலையத்தில், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்திருந்தார்.
இந்நிலையில், பயணத்தடையை மீறியதால் குவைடோ வெனிசுவேலாவுக்குள் செல்வதை தடுக்கக் கூடிய குடிவரவு அதிகாரிகளால் விமானநிலையத்தில் எவ்வாறு கையாளப்பட்டதாக ஊடகவியலாளரொருவர் வினவியபோது, தன்னை ஜனாதிபதியாக அவர்கள் நடத்தியதாக குவைடோ கூறியுள்ளார்
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago