Editorial / 2019 பெப்ரவரி 28 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் வெளிநாட்டமைச்சர் மொஹமட் ஜவாட் ஸஃரீப்பின் இராஜினாமாவை, ஈரானின் ஜனாதிபதி ஹஸன் றொஹானி, நேற்று நிராகரித்தார்.
தடைகளிலிருந்து மீழும் பொருட்டு ஈரானின் அணுத் திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருந்த மொஹமட் ஜவாட் ஸஃரீப், தனது இராஜினாமை, இன்ஸ்டாகிராமில் கடந்த திங்கட்கிழமை அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரானிய அரச செய்தி முகவரகமான ஐ.ஆர்,என்.ஏயால் பிரசுரிக்கப்பட்ட கடிதத்தில், “பரவலான ஐக்கிய அமெரிக்க அழுத்தங்களுக்கெதிராக தடையை ஏற்படுத்துவதில் முன்னிலையிலிருக்கும் நம்பிக்கையான, துணிச்சலான, மதநம்பிக்கையுடைய நபராக உயர் தலைவர் உங்களை வர்ணித்த நிலையில், உங்களது இராஜினாமை ஏற்றுக் கொள்வது குறித்து நான் கருத்திற் கொள்வது தேசிய நலன்களுக்கு எதிரானது. நிராகரிக்கிறேன்” என ஜனாதிபதி றொஹானி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானின் வெளிநாட்டுக் கொள்கைக்குப் பொறுப்பான பிரதான நபர் மொஹமட் ஜவாட் ஸஃரீப் எனத் தெரிவித்த புரட்சிகர காவலர்களின் சிரேஷ்ட தளபதி குவாசின் சொலெய்மானி, உயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனியால் அவர் ஆதரவளிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஈரானியர்களின் ஆதரவுக்காக அவர்களுக்கு மொஹமட் ஜவாட் ஸஃரீப், நேற்று நன்றி கூறியிருந்தார்.
அந்தவகையில், ஜனாதிபதி றொஹானியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ஆர்மேனியப் பிரதமர் நிகொல் பஷின்யானை, ஈரானியத் தலைநகர் தெஹ்ரானுக்கு வரவேற்கும் நிகழ்வொன்றில் மொஹமட் ஜவாட் ஸஃரீப் கலந்துகொண்டதாக, அரை உத்தியோகபூர்வ ஐ.எஸ்.என்.ஏ செய்தி முகவரகம் செய்தி வெளியிட்டிருந்தது.
தனது இராஜினாமாவுக்கான குறிப்பிட்ட காரணமெதுவையும் மொஹமட் ஜவாட் ஸஃரீப் வழங்காதபோதும், அணு ஒப்பந்தத்தை விமர்சித்தமை காரணமாகவே அவர் இராஜினாமா செய்திருந்ததாக அவரின் நட்புறமானமொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தானும் இராஜினாமா செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரொருவர் கூறிய அறிக்கைகளை ஈரானின் எண்ணெய் அமைச்சர் பிஜான் ஸன்கணேஷ் நிராகரித்தாக, ஐ.எஸ்.என்.ஏ தெரிவித்துள்ளது
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago