Ilango Bharathy / 2022 ஜனவரி 04 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத்தில் தினமும் 50 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவதாகத் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து அந்நாட்டு உட்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்” கடந்த ஆண்டு மாத்திரம் குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளன.
மேலும் மாதத்திற்கு 1,518 பேர் வரை நாடு கடத்தப்படுகின்றனர். அத்துடன் கடந்த ஆண்டு மாத்திரம் 11,177 ஆண்கள் மற்றும் 7,044 பெண்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

காலாவதியான இருப்பிட சான்றிதழ்களை உபயோகித்து சட்டவிரோதமாக வசிப்பவர்களே பெரும்பாலும் இவ்வாறு நாடு கடத்தப்படுகிறார்கள்.
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், தற்கொலைக்கு முயன்றோர், ஊரடங்கு விதிகளை மீறியோரும் கடந்த ஆண்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆர்பாட்டங்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்கள், நாட்டின் பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை கொண்டவர்களாகக் கருதப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள்” எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .