R.Tharaniya / 2025 ஜூலை 03 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சித் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆண்டு மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இது வன்முறையாக மாறிய தையடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி இந்தியாவில் தஞ்சமடைந்தார். அதன் பிறகு அங்கு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
இதையடுத்து, சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் (ஐசிடி) ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஹசீனா ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஐசிடி-யின் தலைவர் நீதிபதி முகமது குலாம் முர்துசா மஜும்தார் தலைமையிலான 3 பேர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி நேற்று தீர்ப்பு வழங்கியது. வங்கதேசத்திலிருந்து தப்பிய பிறகு ஹசீனாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
28 Mar 2026
28 Mar 2026