Freelancer / 2023 ஓகஸ்ட் 06 , பி.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் இளைஞன் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன.
இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் என்ற அந்த வாலிபர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் வடிவமைப்பை மாற்றி சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.
அதாவது ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி செல்லும் போது அந்த ஸ்கூட்டர் ரிவர்சில் செல்வது போல தோற்றமளிக்கும். அந்த வகையில் தனது ஸ்கூட்டரை அப்படியே மாற்றி வடிவமைத்து சாலையில் ஓட்டி சென்றுள்ளார்.
அவரது ஸ்கூட்டியின் சைலன்சர் முன்பக்கம் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரில் இவர் சீட்டிற்கும், ஹேன்டில் பாருக்கும் இடையில் உள்ள இடத்தில் அமர்ந்த படி காலை அதற்கென பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் வைத்து வாகனத்தை ஓட்டி உள்ளார். பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், சாலையில் செல்லும் போது மற்ற பயணிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை சக பயணி ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட அது வைரலாகி வருகிறது.
10 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
2 hours ago