Mayu / 2026 மே 11 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக அமைச்சரவை பதவியேற்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) இளம் அமைச்சர் கீர்த்தனா அவர்கள் தனது வெற்றிச் சான்றிதழை எடுத்து வர மறந்ததால், ஏனைய அமைச்சர்களுடன் இணைந்து பதவியேற்க முடியாமல் போன சம்பவம் இன்று சட்டமன்றத்தில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கீர்த்தனா, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இளம் பெண் அமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இன்று நடைபெற்ற உத்தியோகபூர்வ பதவியேற்பு விழாவில் ஏனைய அமைச்சர்களுடன் அவர் கலந்துகொண்டார்.
இருப்பினும், சட்டமன்ற உறுப்பினராக (MLA) வெற்றி பெற்றதற்கான உத்தியோகபூர்வ வெற்றிச் சான்றிதழை (Winning Certificate) அவர் கையில் கொண்டு வரவில்லை என்பது கடைசி நேரத்தில் தெரியவந்தது.
தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாத காரணத்தால், ஏனைய அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்களுடன் இணைந்து அவரால் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொள்ள முடியாமல் போனது.
வெற்றிச் சான்றிதழைச் சமர்ப்பித்த பின்னர், அவர் தனியாகப் பதவியேற்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. "முதல் நாளே இப்படியா?" எனச் சமூக வலைதளங்களில் இது குறித்த விமர்சனங்கள் எழுந்தாலும், நிர்வாக ரீதியான ஒரு சிறிய மறதியே இதற்குக் காரணம் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மிகவும் இளம் வயதில் அமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள கீர்த்தனாவுக்குச் சமூக வலைதளங்களில் ஆதரவும் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
20 minute ago
1 hours ago