Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செனகல் நாட்டில் இருந்து ஸ்பெயினுக்கு 3 படகுகளில் பல்வேறு காரணங்களால் புலம்பெயர முயன்ற 300 பேரை காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை ஸ்பெயின் நாட்டு உதவிக் குழு ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் திகதி அன்று மத்திய செனகல் பகுதியான Mbour நகரில் இருந்து 100 பேருடன் இரண்டு படகுகள் புறப்பட்டுள்ளன. அதற்கடுத்த நான்காவது நாள் 200 பேருடன் மற்றொரு படகு புறப்பட்டுள்ளது. இதனை வாக்கிங் பார்டர்ஸ் எனும் ஸ்பெயின் நாட்டு உதவிக் குழு தெரிவித்துள்ளது. இந்த படகுகள் புறப்பட்டது முதல் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது.
“காணாமல் போன இந்த மக்களை நாம் தேட வேண்டியது மிகவும் அவசியம். கடலில் பயணித்த மக்களில் அதிகமானோர் காணவில்லை. இது இயல்பானது அல்ல. இந்த பணியை மேற்கொள்ள நிச்சயம் வானூர்திகள் தேவைப்படும்” என வாக்கிங் பார்டர்ஸ் ஒருங்கிணைப்பாளர் ஹெலினா மலேனோ கார்சன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
17 minute ago
19 minute ago
28 minute ago