Editorial / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதான கட்சிகளின் வலையமைப்புகளை மீறிய, அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான இணையவழித் தாக்குதல், வெளிநாட்டு அரசாங்கமொன்றால் மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன், நேற்றுத் தெரிவித்தபோதும் சந்தேகநபர்கள் எவரையும் பெயரிட்டிருக்கவில்லை.
அவுஸ்திரேலியாவில், இவ்வாண்டு மே மாதத்தில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், தேசிய நாடாளுமன்றத்தின் க வலையமைப்பு மீதான தாக்குதலொன்றை, இணையவழி புலனாய்வு முகவரகம் கண்டுபிடித்தமையைத் தொடர்ந்து, அவசரமாக தங்களது கடவுச்சொற்களை மாற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இம்மாதம் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், விசாரணையாளர்களின் ஆரம்பகட்ட மதிப்பீட்டை வெளியிட்ட பிரதமர் ஸ்கொட் மொரிசன், பிரதான கட்சிகளின் வலையமைப்புகளை ஹக்கர்கள் மீறியுள்ளதாகக் தெரிவித்துள்ளதுடன், இந்த நடவடிக்கைக்கு அரசாங்கமொன்றே காரணமென தங்களது இணைய நிபுணர்கள் நம்புவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
லிபரல், தொழிலாளர், தேசிய கட்சி ஆகிய சில கட்சிகளின் வலையமைப்புகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்த பிரதமர் ஸ்கொட் மொரிசன், எந்தத் தகவல்கள் ஆராயப்பட்டுள்ளதென வெளிப்படுத்தாதபோதும் தேர்தலில் தலையீட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லையெனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், உள்ளக வலையமைப்புகளை விசாரணையாளர்கள் இன்னும் பாதுகாப்பதாக இணையவழிப் பாதுகாப்புக் பொறுப்பான திணைக்களமான அவுஸ்திரேலிய இணையவழிப் பாதுகாப்பு நிலையத்தின் தலைவர் அலஸ்டிர் மக்கிறிபோன் தெரிவித்துள்ளார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago