Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 03 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதமேந்திய குழு இஸ்ரேல் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை (02) இஸ்ரேல் இராணுவம் லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள ஷியா மாவட்டத்தில் உள்ள கட்டடத்தை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
“ஹிஸ்புல்லா ஆதிக்கம் செலுத்தி வரும் பகுதியிலேயே இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், பலஸ்தீன தலைவர்களை குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும்” என ஹிஸ்புல்லா தலைவர் சயத் ஹசன் நஸ்ரல்லா தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட தலைவர் சலா அரூரி என்றும், குழுவின் ராணுவ பிரிவின் நிறுவனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் டிரோன் மூலம் இந்த தாக்குதலை நடத்தியதாக லெபனான் நாட்டின் தேசிய நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் அதிகாரிகள் இதற்கு கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இஸ்ரேல் இராணுவ செய்தி தொடர்பாளர், “நாங்கள் தொடர்ந்து ஹமாஸ்க்கு எதிராக போரில் கவனம் செலுத்துவோம்” என்றார்.
ஆனால் அவர் நேரடியாக சலா அரூரி மரணம் குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. “நாங்கள் எந்த சூழ்நிலையிலும் தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
30 minute ago
42 minute ago
1 hours ago