2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஹரி -மேகன் சர்ச்சை; OTT தளங்கள் மீது அதிரடி நடவடிக்கை

Ilango Bharathy   / 2022 டிசெம்பர் 21 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பிரித்தானியாவின் ராஜ குடும்பத்தைச்  சேர்ந்தவர்கள்  இளவரசர்  ஹரி-மேகன் தம்பதியினர்.

அண்மையில் இத்தம்பதியினர் பங்குபற்றிய ஆவணப் படமொன்று பிரபல  OTT தளமான நெட்பிலிக்ஸில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதில் ”கேட் மில்டனை இளவரசர் வில்லியம், காதலிக்கவில்லை.  அரச குடும்பத்தின் உறுப்பினராக இருப்பதற்காகவே திருமணம் செய்தார்” என்று  தெரிவித்தார்.

 அத்துடன் ” நான் மேகனை சந்திப்பதற்கு சென்ற சமயத்தில் ஊடகங்கள் அவரை விரட்டுவது குறித்து நான் அச்சமடைந்தேன்.  என்னோடு என் உலகில் இணைவதற்கு மேகன்  பலவற்றை தியாகம் செய்திருக்கிறார். அதன் பின்னர்  அவரின் உலகத்தில் என்னை இணைத்துக் கொள்ள என்னால் முடிந்த தியாகங்களை செய்தேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த ஆவணப்படமானது மக்கள் மத்தியில் பிரித்தானிய அரச குடும்பம் குறித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் நெட்ஃபிளிக்ஸ் உள்ளிட்ட OTT  தளங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் ஒளிபரப்பு கண்காணிப்பு அமைப்பான Ofcom எனப்படும் தகவல் தொடர்பு அலுவலகத்திற்கு பிரதமர் ரிஷி சுனக்  அங்கீகாரம் வழங்கியுள்ளார்.

இது குறித்து  வெளியிடப்பட்ட அறிக்கையில் ” பார்வையாளர்கள் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட OTT  தளங்களில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும், குறித்த OTT தளங்களுக்கென புதிய விதிமுறைகள் இணைக்கப்பட்டு புதிய சட்டமொன்று நிறைவேற்றப்படவுள்ளதாகவும்  , அதனை மீறும் OTT தளங்கள் மீது  உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .