Editorial / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவைச் சேர்ந்த தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாவியின் பிரதம நிதி அலுவலகரும் அந்நிறுவனத்தின் நிறுவுநரின் மகளுமான மெங் வன்ஸோவு, கனடாவில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர், ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் மீது ஐ.அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகளை, ஹுவாவி நிறுவனம் மீறியதா என்பது தொடர்பான விசாரணைகளை, ஐ.அமெரிக்கா ஆரம்பித்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகிச் சில நாள்களில், இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், ஐ.அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள், சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற, இரு நாட்டு ஜனாதிபதிகளுக்குமிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து தணிந்திருந்தது எனக் கருதப்படும் நிலையில், தற்போது இந்தக் கைது, அந்த முரண்பாட்டை மேலும் புதிதாக்கியுள்ளது.
வங்குவார் நகரத்தில் வைத்தே, கடந்த சனிக்கிழமையன்று, மெங் கைதுசெய்யப்பட்டாரென அறிவிக்கப்படுவதோடு, அவரது பிணை தொடர்பான நீதிமன்ற வழக்கு, இன்று (07) இடம்பெறவுள்ளது. அத்தோடு, ஐ.அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை அவர் எதிர்நோக்குகிறார் என்பதை, கனேடிய நீதித் திணைக்களப் பேச்சாளரொருவர் ஏற்றுக்கொண்டார்.
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
1 hours ago
2 hours ago