2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

நல்லூர் பிரதேச இளைஞர் கழகம் வெற்றி

Super User   / 2014 மே 18 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா 


யாழ் மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தினால், யாழ் மாவட்ட பிரதேச இளைஞர் சேவைகள் மன்றங்களுக்கு இடையே நடத்தப்பட்ட கரம் சுற்றுப்போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்; நல்லூர் பிரதேச இளைஞர் கழக அணி சம்பியனாகியது.

கொக்குவில் மத்திய சனசமூக நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை (17) இடம்பெற்ற கரம் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக அணியும் யாழ்ப்பாணம் பிரதேச செயலக இளைஞர் கழக அணியும் மோதின.

இதில் நல்லூர் பிரதேச இளைஞர் கழக அணி 25:00 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X