2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழில் சர்வதேச தரத்திலான கால்பந்தாட்ட பயிற்சி மைதானம்

George   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


பீஃபா அமைப்பு மற்றும் ஜேர்மன் அரசாங்கம் ஆகியவை வழங்கிய 100 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் அரியாலையில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான கால்பந்தாட்ட பயிற்சி மைதானம், சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளச்சரால் செவ்வாய்க்கிழமை (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த மைதானம் அமைப்பது தொடர்பில் 2011ஆம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டு, வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 2012ஆம் ஆண்டு பணிகள் பூர்த்திடையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த நிர்மாணப்பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தன.

இலங்கை கால்;பந்தாட்ட சம்மேளனத்தின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஜோசப் பிளச்சர் இந்த மைதானத்தை திறந்து வைத்துள்ளார்.

இந்த மைதானத்தை வடமாகாணத்திலுள்ள அனைத்து கால்;பந்தாட்ட வீரர்களும் பயிற்சிகளுக்கான பயன்படுத்த முடியும்.

தற்போது திறந்து வைக்கப்பட்டாலும் 6 மாதங்களின் பின்னரே மைதானம், வீரர்கள் பயிற்சிகள் பெறுவதற்கு அனுமதியளிக்கப்படும் என இலங்கை கால்;பந்தாடட சம்மேளனங்களின் தலைவர் றஞ்சித் றொட்ரிக்கோ தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கம, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .